வாக்‍காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்‍கம் செய்ய இன்றும் நாளையும் சிறப்பு முகாம் - இணையதளம் மூலமும் பதிவு செய்ய ஏற்பாடு

Nov 21 2020 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
வாக்‍காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்‍கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் இன்று வாக்‍காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

வாக்‍காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதேபோல், அடுத்த மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இன்று வாக்‍காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 3 ஆயிரத்து 754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச் சாவடிகளும், எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்‍கும் வகையில், பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில், சென்னை எம்.ஜி.ஆர்.நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்‍கப்பட்டுள்ளன. அதில் வாக்‍காளர்கள் தங்களது பட்டியலை சரிபார்த்து பயன்பெறலாம்.

செங்கல்பட்டு மாவட்டத்திலும் வாக்‍காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு வடக்கு மாவட்டக்‍கழகம் சார்பில், பம்மல் நகரக் கழகச் செயலாளர் திரு.P. ஜெய கோபி தலைமையில், பம்மல் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், வாக்‍காளர்களுக்‍கு, பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அ.ம.மு.க.வினர் உதவி செய்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு முகாமில், புதிய வாக்காளர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில், வாக்குச் சாவடிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் வாக்‍காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஏராளமான இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், மணப்பாறை உட்பட 9 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2 ஆயிரத்து 531 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வாக்‍காளர்கள், தங்களது பெயர் விபரங்களை சரிபார்த்துக் கொண்டதுடன், இளம் வாக்காளர்கள் புதிதாக தங்களை வாக்காளர்களாக இணைக்க படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

வாக்‍காளர்கள் பயன்பெறும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிபேட்டை பகுதிகளில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாமுக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டது. கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. செந்தமிழன் நேரில் பார்வையிட்டு, பொதுமக்‍களுக்‍கு உதவிகளைச் செய்தார். தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.சுகுமார் பாபு, சேப்பாக்கம் பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு.எல்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடசென்னை தெற்கு மாவட்டம் துறைமுகம் பகுதி அ.ம.மு.க சார்பில் 60-வது வட்டத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்காளர் முகாமை வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.சந்தானகிருஷ்ணன் ஆய்வு செய்து கழக நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். இதேபோல், எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 76வது வட்டத்திலுள்ள கே.பி. பார்க் அருகே அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்காளர் முகாமையும், 58வது வட்டத்திலுள்ள பேரக் சாலையில் அமைக்கப்பட்ட வாக்காளர் முகாமையும் ஆய்வு செய்து கழக நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

கொளப்பாக்‍கம், ஐயப்பன்தாங்கல் அரசுப் பள்ளிகளில் வாக்‍காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில், வாக்‍காளர்களுக்‍கு கழகத்தினர் உதவிகளைச் செய்தனர். குன்றத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் திரு.பி.முத்தையா, பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்‍காளர் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் திரு.பா.பொன்னையா ஆய்வு செய்தார். பெரியகுப்பம், ஒண்டிக்குப்பம், பூந்தமல்லி வட்டத்திற்குபட்ட ஆண்டர்சன்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் முகாம்களை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் உள்ளிட்ட பணிகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.பொன்ராஜா பார்வையிட்டார். இந்தப் பணிகளின் போது, வாக்காளர்களுக்கு உதவும் வகையில், கழக நிர்வாகிகளுக்‍கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம், வன்னியர்பாளையத்தில் அமைக்‍கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில், கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கழகத்தினர் உதவி செய்தனர்.

கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆடிட்டர் திரு.என்.சுந்தரமூர்த்தி தலைமையில், கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு கழக நிர்வாகிகள் உதவி செய்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்‍காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 2021 ஜனவரி 1-ம் தேதி, 18 வயது பூர்த்தி அடைபவர்கள், தங்களது பெயரை சேர்க்க ஆதார் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு விண்ணப்பித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 652 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் போன்றவற்றுக்‍காக பொதுமக்‍கள் படிவங்களை வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00