மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழக வருகை எதிரொலி : ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #GoBackAmitShah முதலிடம்

Nov 21 2020 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவின் தமிழக வருகையையொட்டி, Go Back AmitShah என்ற ​ஹேஷ்டேக், இந்திய அளவில், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

மத்தியமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை எதிரொலி: டுவிட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி இந்தியளவில் முதலிடம்.!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருவதற்கு எதிராக டுவிட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா இன்று (21ம் தேதி) சென்னை வருகிறார். அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கோயம்புத்தூர், அவினாசி சாலையில் ரூ.1,620 கோவியில் உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், சென்னை வர்த்தக மையம் ரூ.309 கோவியில் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடியில் பெட்ரோலிய முனையம், அமுல்லைவாயல் ரூ.1,400 கோவியில் லூப் பிளானட் அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நாளை இரவு ஆலோசனையும் நடத்துகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருவதற்கு எதிராக டுவிட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது, #GoBackAmitShah ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரும்போது #GoBackmodi ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகும் நிலையில், தற்போது, அமித்ஷா வருகைக்கும் எதிராக #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. #GoBackAmitShah ஹாஷ்டேக் டுவிட்டரில் தமிழகத்திலும் முதலிடத்தில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00