பா.ஜ.க.வினரின் பெரும் வரவேற்புக்‍கு மத்தியில் சென்னை வந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா - மாலையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

Nov 21 2020 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
பா.ஜ.க.வினரின் பெரும் வரவேற்புக்‍கு மத்தியில், மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். விமான நிலையத்தில் முதலமைச்சர் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

மத்திய அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான திரு. அமித்ஷா, 2 நாள் பயணமாக சற்றுமுன் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். மீனம்பாக்‍கம் விமானநிலையம் தொடங்கி வழி நெடுகிலும் கட்சித் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்‍கு செல்லும் அமித்ஷா, சிறிதுநேரம் அங்கு ஓய்வெடுக்‍கிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாலை 4 மணிக்‍கு கலைவாணர் அரங்கம் செல்லும் அவர், அங்கு மெட்ரோ ரயில் விரிவாக்‍க திட்டம், சென்னை அருகே அமையும் நீர்த்தேக்‍க திட்டம் ஆகியவற்றை காணொலிக்‍ காட்சி மூலம் திறந்துவைக்‍கிறார். அவரது வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், ஜி.எஸ்.​டி. சாலை, காந்தி மண்டபம், அடையாறு ஆகிய பகுதிகள் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலைவாணர் அரங்கம், விமான நிலையம் போன்ற இடங்களில் துப்பாக்‍கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00