மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - தமிழக அரசு அறிவிப்பு

Nov 21 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவக்‍கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக்‍கல்லூகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்‍ கட்டணத்தை, உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், தமிழக அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டுக்‍கான சட்டம் இயற்றப்பட்டு, மொத்தம் 313 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று, மாணாக்கர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணாக்கர்களின் கல்விக் கட்டணத்தை, உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், உடனடியாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்கவும், அந்நிதியில் இருந்து மாணாக்கர்களுக்கான கல்வி, விடுதிக்‍ கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00