வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை அசுர வேக புயலாக மாற வாய்ப்பு - காரைக்கால் - மாமல்லபுரம் இடையே வரும் 25ம் தேதி கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 22 2020 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் தீவிரமடைந்து அதிவேக புயலாக உருவெடுக்கும் என்றும், வரும் 25ம் தேதி காரைக்கால்-மாமல்லபுரம் இடையே அது கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த 24 மணிநேரத்தில் இது அசுர வேக புயலாக உருவெடுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை அல்லது மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும்ம் 25ம் தேதியன்று இந்த புயல் புதுச்சேரியின் காரைக்காலுக்கும், தமிழகத்தின் மாமல்லபுரம் பகுதிக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், செவ்வாய்க்கிழமை முதல் பலத்த மழை பெய்யும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00