தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக இன்றும் வாக்‍காளர் சேர்ப்பு முகாம் - பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்‍கம் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கு அ.ம.மு.க.வினர் உதவி

Nov 22 2020 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
வாக்‍காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்‍கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக வாக்‍காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர் முகாமில், ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் A. N. லட்சுமிபதி தலைமையிலான கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கி உதவிகளை செய்தனர். மாவட்டக் கழக மகளிரணி செயலாளர் திருமதி.விஜயலட்சுமி, மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் திரு.சரவணன், ஒன்றிய துணைச் செயலாளர் திரு.திருவேங்கடம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும், திருநெல்வேலி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும், 2 ஆயிரத்து 531 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான படிவங்களைப் பெற்று, அதற்கான ஆவணங்களுடன் சமர்ப்பித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் 593 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வாக்‍காளர்கள், தங்களது பெயர் விபரங்களை சரிபார்த்துக் கொண்டதுடன், புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை இணைப்பதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 652 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00