விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - அருவியில் நீராடியும், படகு சவாரி செய்தும் மகிழ்ச்சி

Nov 22 2020 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
தருமபுரி மாவட்டம் ஒகேனக்‍கல் அருவியில் நீராடியும், படகு சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.

தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகத் திகழும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில், விடுமுறை தினமான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, புதுச்சேரியிலிருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். ஒகேனக்கல் காவிரியில் சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்‍கிறது. குறைவான நீர் வரத்து இருந்ததால், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அருவியில் நீராடியும், படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

ஐந்தருவி, சினி பால்ஸ் உட்பட அருவியின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் மீன் உணவுகளையும் சுவைத்தனர். கொரோனா தொற்றின் ஆபத்தினை உணராமல் சுற்றுலாப்பயணிகள் முகக்‍கவசம் இன்றியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூட்டம் கூட்டமாக சென்றதை அங்கிருந்த அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00