உயிரிழந்த மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் எரிக்க முயற்சி : காவல் சிறப்பு உதவி ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை

Nov 22 2020 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
உயிரிழந்த மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக எரிக்க முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரிடம் தர்மபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்மேகம் பொம்மிடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பேபி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு பேபி உயிரிழந்த நிலையில், தனது மனைவி கொரோனா வைரஸின் காரணமாக இறந்து விட்டதாக கூறி அவசர அவசரமாக அவரது சடலத்தை பாலிதீன் கவரில் கட்டி யாருக்கும் தெரியாமல் கார்மேகம் எரிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கார்மேகத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பேபியின் இறப்பில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00