லடாக்‍கில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல் மதுரை கொண்டு வரப்பட்டு ராணுவ வீரர்கள், காவல்துறையினர் அஞ்சலி - சொந்த ஊரில் அடக்‍கம் செய்ய ஏற்பாடு

Nov 22 2020 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
லடாக்கில் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு, மதுரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி, கடந்த 19-ம் தேதி பணி நிமித்தமாக, லடாக் கிளேசியர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.த.அன்பழகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார், மாநகராட்சி ஆணையர் திரு.விசாகன், மதுரை குருப் கமான்டன்டர் கர்னல் ரவிக்குமார், டிஎஸ்பி வினோதனி உள்ளிட்டோர் ராணுவ வீரரின் உடலுக்கு, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணுவ வீரரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. கருப்பசாமிக்கு திருமணம் ஆகி, 2 மகள்களும், ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00