நிவர் புயல் கரையைக் கடந்தபோதிலும் சென்னையில் நாளை வரை மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
Nov 26 2020 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிவர் புயல் கரையை கடந்த நிலையிலும் சென்னையில் நாளை வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. நிவர் புயல் வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் தெற்கு கர்நாடக மாவட்டங்களில் வலுவிழக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.