ஆந்திராவில் பிச்சாட்டூர் அணை திறப்பால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஊத்துக்கோட்டை அருகே நீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்
Nov 26 2020 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஆரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னையா கேட்டுக்கொண்டுள்ளார்.