நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட 7 மாவட்டங்களில் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம் - மெட்ரோ ரயில்கள் விடுமுறைக்கால அட்டவணைப்படி இயக்கம்
Nov 26 2020 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அதிதீவிரப் புயலான நிவர் புயல், வலுவிழந்து தீவிரப் புயலாக புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடந்தது. நேற்று இரவு 11.30 மணி தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணி வரை புயல் கரையைக் கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் பல்வேறு மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று புயல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையும் இப்போது தொடங்கியுள்ளது. 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.