மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மதுரையில் போராட்டம் - பேரணியாக சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது
Nov 26 2020 8:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்து, அனைத்து தொழிற்சங்கம் சார்பில், மதுரையில் நடைபெற்ற பேரணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கட்டபொம்மன் சிலையிலிருந்து இரயில் நிலைய சந்திப்பு வரை நடைபெற்ற இந்த பேரணியில், கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த 7,500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - நூறு நாட்கள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் - பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் - அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.