சென்னையில் நிவர் புயல் மழையால் பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு அ.ம.மு.க சார்பில் உதவி - உணவு, பிரட், போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன

Nov 26 2020 8:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் நிவர் புயலால் பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

சென்னை ஆர்.கே.நகரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் திரு. ஜி.செந்தமிழன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். வடசென்னை ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள 47-வது வட்டம் மீனாம்பாள் நகரில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாவட்ட கழக செயலாளர் திரு. லக்ஷ்மி நாராயணன் ஏற்பாட்டில், கழக துணை பொதுச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு. ஜி.செந்தமிழன் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்ட துறைமுகம், திரு.வி.க.நகர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்‍களுக்‍கு வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சந்தானகிருஷ்ணன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். துறைமுகம் பகுதியில் 56,57,60 ஆகிய வட்டங்களிலும், திரு.வி.க.நகர் தொகுதிக்‍குட்பட்ட 71 மற்றும் 75-ஆம் வட்டத்திற்குட்பட்ட குடிசைப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்‍களுக்‍கும் உணவு ,பிரட், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் திரு. இ.​பி.பாண்டியன், திரு.டி.வி.நாசர், மாவட்ட கழக நிர்வாகிகள் திருமதி.மலர்விழி, திரு. அலியார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் எழும்பூர் பகுதியிலும் கழக நிர்வாகிகள் சார்பில் பொதுமக்‍களுக்‍கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதிக் கழகம் சார்பில், மூன்றாவது வட்டக் கழக செயலாளர் திரு. C. ரவி ஏற்பாட்டின் பேரில், சுனாமி குடியிருப்பு, பர்மா நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில், மழையால் இன்னலுக்‍கு ஆளாகியுள்ள மக்களுக்கு, உணவு வழங்கப்பட்டது. திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர் திரு. கே.ஏ. குப்பன், மாவட்ட இணைச்செயலாளர் திரு. ஜெ. மதிவதனம், மேற்கு பகுதி துணைச் செயலாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00