நிவர் புயல், கரையைக்‍ கடந்த நிலையில், வரும் 29-ம் தேதி, வங்கக்‍ கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

Nov 26 2020 8:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிவர் புயல் கரையை கடந்த நிலையில், வரும் 29-ம் தேதி, வங்கக்‍ கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறி, புதுச்சேரி அருகே நள்ளிரவில் கரையைக் கடந்தது. நிவர் புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காரைக்கால், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. புயல் கரையைக் கடந்தபோதும், பரவலாக மழை, கடல் சீற்றம் உள்ளிட்டவை தொடர்கின்றன.

இந்நிலையில், கரையைக்‍ கடந்த புயல், தற்போது வடதமிழக கடலோரப் பகுதியில், புதுச்சேரிக்‍கு வடமேற்கே 85 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்‍கு தென் மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இது, மேலும் வலுவிழந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் - இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்‍கு 70-லிருந்து 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்‍ கூடும் - வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்‍ கூடும் -என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்‍ கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில், வரும் 29-ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00