செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியிலிருந்து ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Nov 26 2020 8:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியிலிருந்து ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில், நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்கப்பட்டது. மழை மற்றும் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.