திருப்பூர் மாவட்டத்தில் ரூ.10 ஆயிரத்திற்கு 3 மாத ஆண் குழந்தை விற்பனை - தாய் உட்பட 3 பேர் கைது
Nov 26 2020 8:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே 3 மாத ஆண் குழந்தை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்னர். திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் - கவிதா தம்பதி, வறுமை காரணமாக தங்களது மூன்று மாத ஆண் குழந்தையை, கீரனூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் - விஜி தம்பதிக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இது தொடர்பான வழக்கில் குழந்தையை வாங்கிய தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.