அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் வரும் 2ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Nov 29 2020 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 2ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் வீசிய நிவர் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் தற்போது மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 36 மணிநேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இது சற்று தாமதமாவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் பட்சத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டது. வரும் 2ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் அன்றைய தினம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.