அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முளைக்க தொடங்கியதால் பெரும் பாதிப்பு - கும்பகோணம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கவலை
Jan 13 2021 10:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முளைக்க தொடங்கிவிட்டதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் வட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நிவர் மற்றும் புரெவி புயல்களால் ஏற்கனவே விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில், மீண்டும் மழை பெய்து வருவதால், பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. திருவிசைநல்லூர், திருமணஞ்சேரி, உடையாளூர், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முளைக்க தொடங்கிவிட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.