சென்னை கோயம்பேடு பகுதியில் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் - பொங்கல் பேருந்துகள் மற்றும் கோயம்பேடு சரக்கு லாரிகளால் முடங்கியது போக்குவரத்து - மணிக்கணக்கில் வாகனங்கள் நின்றதால் பொதுமக்கள் அவதி
Jan 13 2021 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோயம்பேடு பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை முதல் கடும் வாகன போக்குவரத்து நெருக்கடி நிலவியது.
சென்னையின் பிரதான பகுதியில் ஒன்றான கோயம்பேடில் இன்று காலை முதல் மணிக்கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஏற்கெனவே அங்கு பாலம் வேலை காரணமாக நெருக்கடி இருந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதாலும், கோயம்பேடு சந்தைக்கு ஏராளமான சரக்கு லாரிகள் வருகை தந்ததாலும் அந்த பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது. திரும்பிய திசையெல்லாம் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு சென்றவர்கள் வெளியே வரமுடியாமலும், வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்ல முடியாமலும் பெரும் அவதிக்கு ஆளாகினர். கோயம்பேட்டில் தொடங்கி வடபழனி, அசோக்நகர் வரை இந்த போக்குவரத்து நெருக்கடியின் தாக்கம் இருந்தது.