தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்த ரூ.621 கோடி செலவாகும் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

Jan 13 2021 2:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த 621 கோடி ரூபாய் செலவாகும் என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்‍கான பதவிக்‍காலம் வரும் மே மாதத்தில் முடிவடைய உள்ளதால், தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. தேர்தல் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கு 621 கோடி ரூபாய் செலவாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்‍கான செலவுத்தொகையை தமிழக அரசிடம் கோரியிருப்பதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்‍கைகளுக்‍காக தேர்தல் செலவுகள் மேலும் கூடுதலாக வாய்ப்புள்ளதாகவும் திரு.சாகு குறிப்பிட்டார். பீகாரில் கடைபிடிக்‍கப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் போன்று தமிழகத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றும் திரு.சத்யபிரத சாகு கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00