உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதில் பல கோடி ரூபாய் ஊழல் - ஆளுங்கட்சியினர் மீது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் குற்றச்சாட்டு
Jan 13 2021 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதில் ஆளுங்கட்சியினர் 20 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் செய்துள்ளதாக, திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 430 ஊராட்சிகளில் 45 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உயர் கோபுர மின்விளக்கு அமைக்க டெண்டர் விடப்பட்டு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர், பணிகளை மேற்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் மட்டும் 135 உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை எந்தவிதத்திலும் பின்பற்றாமல், பல கோடி ரூபாய் ஊழல் செய்யும் நோக்கில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டத்தில், உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணியில் பல கோடி ரூபாய் ஊழல் செய்யும் நோக்கில் ஒப்பந்தப்பணியினை ஆளும் கட்சியை சேர்ந்த நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் குற்றம்சாட்டினர்.