வியாழக்கிழமை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு - பாலமேடு, அலங்காநல்லூரிலும் முழுவீச்சில் போட்டிக்கான ஏற்பாடுகள்
Jan 13 2021 8:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் திருநாளையொட்டி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொங்கல் திருநாளான நாளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் 430 மாடுபிடி வீரர்கள், உடற்தகுதி சான்று மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும், 840 காளைகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 16-ம் தேதியும், அதற்கு முன்னதாக பாலமேடு ஜல்லிக்கட்டு நாளை மறுதினமும் நடக்கவுள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணி - பார்வையாளர்கள் அமரும் பகுதி - மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மஞ்சு என்கிற தேங்காய்நார் பரப்புதல் மற்றும் வாடிவாசல் ஆகியன அமைக்கும் பணி தீவீரமாக நடைபெற்று வருகிறது. சிறந்த காளை மற்றும் காளையர்களுக்கு வழங்குவதற்கான பரிசுப் பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.