போகிப் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம் - பழைய பொருட்களை கொளுத்தியதால் எழுந்த புகை மண்டலம்
Jan 13 2021 8:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் பழையப் பொருட்களை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தியதால் நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது.
'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலுள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தினர். சென்னையின் பல்வேறு இடங்களில், பழையப் பொருட்களை சாலையோரத்தில் பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளாக புகை மூட்டமாக காட்சி அளித்தன.
இதேபோல், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் தேவையில்லாத பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர். போகி காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மூட்டம் கடுமையாக இருந்ததால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது.