10, 12ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதி கடிதத்துடன் பள்ளிக்கு வரலாம் - வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Jan 14 2021 10:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், விருப்பம் உள்ள மாணவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 19ம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, பாடங்களை முடிக்க ஏதுவாக, வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் - ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் - தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னரே தங்கள் பள்ளிகளை திறக்கலாம் - பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவுக் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்கள் அவ்வாறே அனுமதிக்கப்படலாம் - மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது - அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்க வேண்டும் - அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.