தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழை நீர் - தொடர் மழை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Jan 14 2021 10:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழை காரணமாக 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக சாலையோரங்களில் கடை பரப்பியுள்ள வியாபாரிகளுக்கு மழையினால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக திரேஸ்புரம், முத்தரையர் காலனி, மாதா நகர் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக மாவட்டத்தில் 46 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.