பொங்கலையொட்டி தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்து கூறி பிரதமர் மோதி - தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை என பெருமிதம்
Jan 14 2021 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பொங்கல் பண்டிகை, நம்மை தூண்டட்டும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி, டிவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை பொங்கல் என தெரிவித்துள்ள பிரதமர், நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோம் என்றும் இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மகர சங்கராந்தி பண்டிகையை கொண்டாடும் வட மாநில மக்களுக்கும் வழத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இப்பண்டிகை நமது பாரம்பரியத்தின் அடையாளமாகவும் இயற்கையின் முக்கியத்துவத்தை கொண்டாடும் விதமாகவும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.