மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்‍கு நீர்வரத்து அதிகரிப்பு - தொடர்ந்து 3வது நாளாக குற்றால அருவிகளில் வெள்ளம்

Jan 14 2021 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையால் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்‍கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைகளில் இருந்து 30 ஆயிரம் கன அடி நீர் திறக்‍கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் 5வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழைக் காலம் முடிந்தும், நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிரம்பின. கடனாநதி, ராமநதி அணைகளும் நிரம்பியதால், அணைகளுக்கு வரும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 5வது நாளாக இன்றும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அங்கு வசிப்பவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். தொடர்ந்து 3-வது நாளாக குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00