புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - முறையான வடிகால் வசதி ஏற்படுத்தித்தர கோரிக்கை
Jan 14 2021 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழைநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியில், தொடர் மழையால் பல வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்படாததால், இதுபோன்ற நிலை ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், வீதிகளில் அமர்ந்து போராடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் கரம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில், ஆயிரம் வீடுகளைக் கொண்ட ஆதிதிராவிடர் காலனியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். பிரதான சாலையில் இருந்து காலனிக்கு செல்வதற்கு இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.