கொடைக்கானலில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தங்கும் விடுதிகளிலேயே முடங்கும் சுற்றுலாப் பயணிகள்
Jan 14 2021 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் செல்லும்இருந்து பூம்பாறை செல்லும் பகுதியில் உள்ள குண்டாறிலும், வத்தலகுண்டு மலைச்சாலையான பனிக்கரையிலும், மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற நெடுஞ்சாலை மற்றும் வனத்துறையினர், மரங்களை அகற்றியதால் போக்குவரத்து சீரானது.
கொடைக்கானலில் அதிக மேகமூட்டம் நிலவி வருவதுடன், தொடர் மழையால் வெள்ளி நீர் அருவி, செண்பகா அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வெளியே வர முடியாமல், தங்கும் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர்.