விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கலை இலக்கிய விழா உற்சாகமாக நடைபெற்றது
Jan 14 2021 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கலை இலக்கிய விழா உற்சாகமாக நடைபெற்றது. கும்மிப்பாட்டு, கோலாட்டம், தெருக் கூத்துக்கள் போன்ற நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
செஞ்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குறிஞ்சி கலை இலக்கிய இரவு விழா நடைபெற்றது. பரதநாட்டியம், தெம்மாங்கு பாட்டு, பறை இசை மேளம், கும்மிப்பாட்டு, கோலாட்டம், தீப்பந்தம் கொண்டு சிலம்பம் சுற்றுதல், தெருக்கூத்து உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் வகையில் விடிய, விடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.