அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா - ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவி
Jan 14 2021 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வட சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.C.P.ராமஜெயம் தலைமையில் வண்ணாரப்பேட்டை காமாட்சி அம்மன் ஆலயம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். முன்னதாக மாவட்ட செயலாளர் திரு.C.P.ராமஜெயம் உடன் இணைந்து கழக நிர்வாகிகள் பொங்கலோ பொங்கல் என்றும் குக்கர் சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையிலும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட கழக துணை செயலாளர் திரு. ஏ.டி.சகாயம், ராயபுரம் பகுதி கழக செயலாளர் திரு.கே.ஒய்.வர்மா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் ஏழை - எளிய மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சேப்பாக்கம் திரு.எல்.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு. கணேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி. தனம், 116-வது மேற்கு வட்ட கழக இணைச் செயலாளர் மெடிக்கல் திரு. சத்தியநாராயணன் ஆகியோர் ஏற்பாட்டில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவல்லிக்கேணி மார்க்கெட் அருகே ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, கரும்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர் திரு. கங்கன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. சந்தானகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் திரு. சுந்தரேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென் சென்னை கிழக்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி கழகத்தின் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தரமணி ஆறுமுகம் தெரு பகுதியில் வேளச்சேரி பகுதி கழக செயலாளர் திரு. சந்திரபோஸ் தலைமையில் குக்கர் வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் சாலையின் நடுவே அடுப்பு மூட்டி அதில் குக்கரை வைத்து பொங்கல் வைத்தனர். பெண்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல், குக்கர் பொங்கல் என கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் தென் சென்னை கிழக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திரு. ஜெ.டி கார்த்திக், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.அழகு சுப்ரமணியம், மாணவர் அணி பகுதி செயலாளர் திரு. ஜெயகாந்தன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் கோடம்பாக்கம் பகுதியில் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பரணீஸ்வரன் தனது குடும்பத்தினர் மற்றும் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதேபோல சென்னை விருகம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தென்சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.விதுபாலன் ஏற்பாட்டில் அ.ம.மு.க வினர் குக்கரில் பொங்கல் வைத்து அப்பகுதி மக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல வரும் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிலும் குக்கர் சத்தம் கேட்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதில் ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.