அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்

Jan 14 2021 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரிய பள்ளபட்டியைச் சேர்ந்த மாவட்ட மாணவரணித் தலைவர் திரு. செல்வகுமார், செயலாளர் திரு. கிருபாகரன் ஏற்பாட்டில், 70-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. ராமுத்தேவர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட, ஒன்றிய, பகுதிக் கழகம் மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மேற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளர் திரு. இசக்கிமுத்து ஏற்பாட்டின் பேரில், கீழ் தட்டப்பாறையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, கழகத்தில் இணைந்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. சிவபெருமாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. நவஜீவன் பெரியசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு. பூலோக பாண்டியன் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00