டாக்‍டர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை

Jan 20 2021 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் காலமான, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர். சாந்தாவின் உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில், காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்று, கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.

சென்னையில் கடந்த 1927-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி பிறந்த டாக்டர் சாந்தா, பள்ளிக்கல்வி மற்றும் மருத்துவ மேற்படிப்புகளை சென்னையிலேயே பயின்றார். டாக்டர் முத்துலட்சுமியால், 1954-ம் ஆண்டு, 12 படுக்கைகளுடன் குடிசையில் தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை, தன்னலமற்ற தனது உழைப்பால், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றினார். 67 ஆண்டுகளாக டாக்‍டர் சாந்தா இந்த நிறுவனத்தில் சேவையாற்றி வந்தார். தமிழகத்தில் மாண்புமிகு அம்மா அறிமுகப்படுத்திய ஔவையார் விருதினை பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பு பெற்றவர் டாக்டர் வி. சாந்தா. டாக்டர் சாந்தா, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.

இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்த டாக்டர் சாந்தா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்‍கப்பட்டிருந்த அவரது உடலுக்‍கு செவிலியர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்‍கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதிச்சடங்கிற்காக, பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு டாக்‍டர் சாந்தாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கண்ணீர்மல்க பிரியாவிடை அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து பெசன்ட் மின் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. காவல்துறையினரின் 72 குண்டுகள் முழங்க, டாக்‍டர் சாந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே, டாக்‍டர் சாந்தா மறைவுக்‍கு இணையதளம் வாயிலாக பலர் தங்களது இரங்கலை பதிவு செய்தனர். வாட்ஸ் அப், பேஸ்புக்‍ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டாக்‍டர் சாந்தாவின் புகைப்படத்தை பலரும் தங்களது Status-ஆக வைத்திருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00