வரும் 27-ம் தேதி தியாகத்தலைவி சின்னம்மா விடுதலை - தமிழகம் முழுவதும் அ.ம.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Jan 20 2021 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத்தலைவி சின்னம்மாவின் விடுதலை அறிவிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தியாகத்தலைவி சின்னம்மா வரும் 27-ம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆகிறார். இதையடுத்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில், அஞ்சுகிராமம் சந்திப்பில், கிழக்கு மாவட்ட செயலாளர் பி. செந்தில் முருகன், கிழக்கு மாவட்ட இணை செயலாளர் திருமதி. அம்மு ஆன்றோ ஆகியோர் தலைமையில், கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இதே போல், தூத்துக்குடி மாவட்டத்தில், கழக அமைப்புச் செயலாளர் திரு. ரா.ஹென்றி தாமஸ் தலைமையில், கழக நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று பழைய மாநகராட்சி வளாகம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், மாநில மகளிரணி துணைச் செயலாளர் திருமதி. சண்முக குமாரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு திரு. எல்.எட்வின் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சை கீழ்வாசல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மனுக்கு, சின்னம்மா நீடூழி வாழ வேண்டி, 108 எலுமிச்சை பழ மாலை அணிவிக்கப்பட்டு, 67 திருவிளக்கு ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00