கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு சென்னையில் வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு - மாநகராட்சி ஆணையர் தகவல்

Jan 20 2021 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மூன்றாயிரத்து 754ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, ஆறாயிரத்து 178ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதிப் பட்டியலை, மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ், ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார். சென்னையில் மொத்தம் 40 லட்சத்து 57 ஆயிரத்து 360 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் ஆண்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 581 பேரும், பெண்கள் 20 லட்சத்து 60 ஆயிரத்து 698 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஆயிரத்து 81 பேரும் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்களைவிட 2 புள்ளி 96 சதவீதம் பேர், வாக்காளர் இறுதிப் பட்டியலில் கூடுதலாக இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்ட விவரங்களை, வாக்குச்சாவடி மையங்களிலும், www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00