குடிசை மாற்று வாரிய அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவ மக்கள் போராட்டம்
Jan 20 2021 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை நொச்சிகுப்பத்தில், குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை உரியவர்களுக்கு வழங்காமல் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, குடிசை மாற்று வாரிய அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விரிவடைந்த குடும்பத்தினருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம், குடிசை மாற்று வாரியத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக தகுதியான நபர்களுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் குடியிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. இதனால் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வரும் மக்கள், வருமானமின்றி பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளை உரியவர்களுக்கு வழங்காமல் வேறு பகுதி மக்களுக்கு வழங்கி அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, மீனவ மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அதிகாரிகளின் இந்த மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக வீடுகள் கட்டப்பட்ட இடத்திலுள்ள குடிசை மாற்று வாரிய அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.