மெரினா ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் - வியாபாரிகள் யாரும் பங்கேற்காததால் அதிகாரிகள் அதிருப்தி

Jan 20 2021 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
மெரினாவில் உள்ள 900 ஸ்மார்ட் கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கலில் வியாபாரிகள் யாரும் கலந்து கொள்ளாதது, உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் முயற்சியாக, ஸ்மார்ட் வண்டி கடைகளை அமைக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சி கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி மொத்தம் 900 கடைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, வியாபாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் முறை, செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் 11 மணிக்கு தொடங்கியது. ஆனால், குலுக்களில் கலந்துகொள்ள வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சதீஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர். பின்னர், வியாபாரிகள் இல்லாமல், அதிகாரிகளே வரிசை எண்களை தேர்ந்தெடுத்து ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டனர். முன்னதாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் குலுக்கல் முறை குறித்து அழைப்பு விடுக்கப்பட்டபோது, வியாபாரிகள் சார்பில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகள் போதாது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00