தியாகத் தலைவி சின்னம்மாவின் உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை அறிவிப்பு - உடல்நிலை முன்னேற்றத்தை பொறுத்து டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யப்படும் என்றும் தகவல்
Jan 23 2021 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தியாகத்தலைவி சின்னம்மாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் நேற்றிரவு 10 மணி அளவில் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், சின்னம்மாவுக்கு உள்ள தொற்று பாதிப்பின் தன்மை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சீராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், சின்னம்மாவுக்கு ஆக்ஸிஜன் அளவு 97 சதவீதமாக முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், சின்னம்மாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.