தியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்

Jan 23 2021 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டக்கழகம் சார்பில் தியாக தலைவி சின்னம்மா பூரண நலம்பெற வேண்டி குலோத்துங்க சோழனின் விண்ணகரம் எனப் போற்றப்படும் மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ இராஜகோபால சுவாமிக்கு ஆயிரத்து 8 மந்திரங்களைக் கொண்ட விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும் தொடர்ந்து மகா தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக செயலாளர் எஸ். காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மத்திய மாவட்டம் பண்ருட்டி நகர செயலாளர் பூக்கடை திரு. பி. சக்திவேல் தலைமையில், தட்டாஞ்சாவடி காளியம்மன் திருக்கோவிலில், சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது, அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களைக்‍ கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் டாக்டர் ஏ.பி.ஆர் பக்தரட்சகன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் திரு. மோகன்குமார், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ஜெயகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் திரு. தங்கதுரை ஏற்பாட்டின் பேரில், தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் ஆலயத்தில், அகல் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் திரு. மகேஷ் குமார், வட்டச்செயலாளர் திரு. கன்னி ராஜ், திரு. மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் ஸ்ரீகுபேர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவை வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. அலாவுதீன் தலைமையில், துடியலூர் பகுதி கழக செயலாளர் திரு. மதனகோபால் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், வைத்தலைவர் திரு. சந்திரன் சுப்பையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00