தூண்டில் வளைவு பாலப் பணிகளை உடனடியாக தொடங்க கோரிக்கை - தூத்துக்குடி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
Jan 23 2021 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில், தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்கக்கோரி, மீனவர்கள் நேற்றிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை மீனவ கிராமத்தில் 170 பைபர் படகுகள் மூலம், மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒராண்டாக நீரோட்ட மாறுபாடு காரணமாக படகுகள் சேதமடைந்து வருகின்றன. எனவே, ஆலந்தலையில் கடல் அரிப்பை தடுக்கும் விதமாக தூண்டில் பாலம் அமைக்கப்படும் என, கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள மீனவர்கள், தூண்டில் பாலம் அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்கக்கோரி, நேற்றிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.