முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்
Jan 23 2021 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், முத்தூட் நிதி நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த 6 பேரை, ஹைதராபாத்தில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒசூரில் உள்ள பாகலூர் சாலையில் செயல்பட்டு வரும் முத்தூட் நிதி நிறுவனத்தில், நேற்று காலை புகுந்த மர்மக் கும்பல், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரை துப்பாக்கி முனையில் மிரட்டி, 12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், 10 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் கொள்ளையர்கள் 6 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடமிருந்து நகைகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.