இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தைக்‍ கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் - கடலுக்‍குச் செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்த புதுக்கோட்டை மீனவர்கள்

Jan 23 2021 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள், கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டைப்பட்டினம் கடற்கரையிலிருந்து கடந்த 18-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர், இலங்கை கடற்படையின் அத்துமீறலால் உயிரிழந்தனர். இலங்கை கடற்படையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து கோட்டைம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், மீனவர்களின் உடல்களை ஒப்படைக்கும் வரை கடலுக்குச் செல்வதில்லை என்றும், நாளை ராமேஸ்வரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, இன்று, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00