தியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்

Jan 23 2021 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர். Roll Visuals திருவள்ளூர் தெற்கு மாவட்டம் மாவட்ட கழகம் சார்பில், போரூரில் உள்ள பாலமுருகன் திருக்கோயிலில், முருகப்பெருமானுக்கு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் ஏழை-எளியோருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன. கழக பொறியாளர் அணி செயலாளர் திரு. ம. கரிகாலன், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. E. லக்கி முருகன், கழக மகளிரணி தலைவர் திரு. இரா.காவேரி, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் A. சதீஷ்குமார் ஏற்பாட்டின் பேரில், சிங்கப்பெருமாள் கோவிலில் அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில்‍ மாவட்டச் செயலாளர் திரு. M.கோதண்டபாணி உள்ளிட்ட​நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. செந்தில் முருகன் தலைமையில், முப்பந்தால் இசக்கியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையும், அன்னை வேளாங்கண்ணி குருசடியில் கூட்டு பிரார்த்தனையும், நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் திருமதி. அம்மு ஆன்றோ, தோவாளை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. கிருஷ்ணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00