கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு

Jan 23 2021 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், 120 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத முதலீடுகள் மற்றும் பல நூறு கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

"இயேசு அழைக்கிறார்" என்ற அமைப்பின் தலைவரும், கிறிஸ்தவ மத போதகருமான பால் தினகரன், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதன்பேரில், சென்னை, கோவை உட்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 4 நாட்கள் நடைபெற்ற சோதனையில், கோவை காருண்யா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பால் தினகரன் வீட்டில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 120 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத முதலீடுகளும், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வசூலித்ததில் பல நூறு கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, இதுகுறித்த விசாரணைக்காக சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக, பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00