சின்னம்மா நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள் : தமிழகம் முழுவதும் அ.ம.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனை - ஆலய வழிபாடுகளில் பொதுமக்களுக்கு அன்னதானம்

Jan 24 2021 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன், சிறப்பாக வாழ வேண்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் தொடர்ந்து சிறப்பு பூஜைகளையும், வழிபாடுகளையும் நடத்தி வருகின்றனர்.

சின்னம்மா உடல் நலம் பெற்று நீண்ட ஆயுள், ஆரோக்கியத்தை வழங்க வேண்டி சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோயிலில் தென் சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.செந்தமிழன் மற்றும் மாவட்ட மகளீர் அணி செயலாளர் திருமதி என்.கே. வத்சலா, மாவட்ட கழக துணை செயலாளர் திரு.சங்கர், மகளிர் அணி பகுதி செயலாளர் திருமதி. வேலாம்பிகை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தென்சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில், சைதாப்பேட்டையை அடுத்த சின்னமலையில் உள்ள, புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், தியாகத் தலைவி சின்னம்மா பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடைபெற்றது. இதில், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் திரு.செந்தமிழன், கழக சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளர் திரு.ஜோ, தென்சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி.வத்சலா, மாவட்ட கழக துணை செயலாளர் திரு. சங்கர் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் திரு.ஆண்டனி இருதயராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட விவசாயப் பிரிவு சார்பாக, ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில், சிறப்பு பூஜையும் அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.ராஜலிங்கம், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் திரு.ஜெ.மகேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், நன்செய் இடையார் ராசா கோயிலில், மாவட்ட கழக செயலாளர் திரு.பி.பி.சாமிநாதன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து முருகனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி முத்தையாபுரம் கணேஷ் நகரில் அமைந்துள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில், தியாகத்தலைவி சின்னம்மா உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்டக் கழக செயலாளர் திரு.டி.வி.ஏ.பிரைட்டர், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.வி.பி.ஆர்.சுரேஷ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு.பூலோக பாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணி கிரேசி, முத்தையாபுரம் பகுதிக் கழக செயலாளர் திரு.கோட்டாளமுத்து உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அமமுக சார்பில், பேராவூரணியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக அமைப்பு செயலாளர் திரு.தேவதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், வாணியம்பாடியை அடுத்த வலையாம்பட்டு கிராமத்திலுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சின்னம்மா நலம்பெற வேண்டி, ஆலங்காயம் ஒன்றியக் கழக செயலாளர் திரு.எழிலரசு, தனது முடியை காணிக்கையாக செலுத்தினார். இந்த வழிபாட்டின்போது, திருப்பத்தூர் மாவட்டக் கழக செயலாளர் திரு.பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திரு.கண்ணபிரான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00