தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாத இறுதி வாரத்தில் அறிவிக்‍கப்பட வாய்ப்பு - அரசு தலைமைச் செயலர், தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரை சந்திக்‍க தேர்தல் ஆணையர்கள் திட்டம் எனத் தகவல்

Jan 24 2021 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாத இறுதி வாரத்தில் அறிவிக்‍கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்‍காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளதால், தேர்தலுக்‍கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்‍கும் நிலையில், இறுதித் தேர்வு மே மாதத்தில் நடைபெறலாம் எனக்‍ கூறப்படுகிறது. எனவே, அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த வேண்டியிருப்பதால், தேர்தல் தேதியை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருவதாகக்‍ கூறப்படுகிறது. எனவே, அடுத்த மாத இறுதி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்‍கான தேதி அறிவிக்‍கப்படலாம் எனத் தெரிகிறது. மே 5-ம் தேதிக்‍குள் தேர்தலை நடத்தி முடிக்‍க திட்டமிட்டிருப்பதாகவும், தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்காக அடுத்த வார இறுதியில், அரசு தலைமைச் செயலர், தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரை சந்திக்‍க தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வர இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00