தேசிய கொடியை பார்த்து நாடுகளின் பெயர்களை சொல்லும் சிறுமி : இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று சாதனை

Feb 14 2021 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக நாடுகளின் தேசிய கொடியை பார்த்து, அந்நாட்டின் பெயரையும், தேசிய மலரையும் சொல்லி சென்னையை சேர்ந்த 7 வயது மாணவி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர்கள் சரவணனன் - துர்கா தேவி தம்பதி. இவர்களின் 7 வயது மகளான திவ்யதர்ஷினி 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். உலக நாடுகளின் பெயர்களையும், தேசிய மலர்களையும் கண்டறிந்து சொல்வதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். சிறுமியின் ஆர்வத்தை உணர்ந்த பெற்றோர்கள் அவருக்கு உரிய ஊக்கத்தை அளித்து பயிற்சி அளித்தனர். இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைப்பெற்ற சாதனை நிகழ்வில், இந்திய சாதனை புத்தகம் தீர்ப்பாளர்கள் பார்வையில், சிறுமி திவ்யதர்ஷினி 1 நிமிடத்தில் 60 உலக நாடுகளின் பெயர்களையும், அந்நாட்டின் தேசிய மலர்களையும் கூறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இதையடுத்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் சிறுமி திவ்யதர்ஷினி இடம் பிடித்துள்ளார். சிறிமிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து ஊக்கமளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00