தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் என பட்ஜெட்டில் தகவல் - அடுத்த ஓராண்டில் கடன் சுமை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என மதிப்பீடு
Feb 23 2021 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடன் சுமை தற்போது 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாகவும் இது வரும் காலத்தில் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலம் முடிவடைவதை ஒட்டி இன்று சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு, கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. நிதி அமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது தி.மு.க உறுப்பினர்கள் பேச முற்பட்டனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அமளியில் ஈடுப்பட்ட திமுகவினர் அவையை விட்டு வெளியேறினர். அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி நிதி அமைச்சர், தமிழகத்தில் கடன் சுமை தற்போது 4 லட்சத்து 85 ஆயிரம் கோடியாக உள்ளதாகவும் எதிர்காலத்தில் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தெரிவித்தார். வருவாய் பற்றாக்குறை 41 ஆயிரத்து 417 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கொரோனா பணிக்காக 13 ஆயிரத்து 352 கோடி செலவிடப்பட்டதாகவும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.