திருவாரூரில் நெல் கொள்முதலுக்கு VAO சிட்டா அடங்கல் வழங்காததால் ஆத்திரம் - வட்டாட்சியர் அலுவலகத்தில் நெல் மூட்டைகளை அடுக்கிவைத்த விவசாயி

Feb 23 2021 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே, அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய, கிராம நிர்வாக அலுவலர் சிட்டாஅடங்கல் வழங்காததால் பாதிக்கப்பட்ட விவசாயி, வட்டாட்சியர் அலுவலகத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்த கலைவேந்தன் என்பவர், தனது வயலில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக, கிராம நிர்வாக அலுவலர் திரு.சிவசண்முகம் என்பவரிடம் சிட்டாஅடங்கல் கேட்டுச் சென்றுள்ளார். ஆனால், கிராம நிர்வாக அலுவலர், சிட்டாஅடங்கல் வழங்காமல் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி கலைவேந்தன், நெல் மூட்டைகளை வாகனத்தில் எடுத்துச்சென்று, நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடுக்கி வைத்தார். தகவல் அறிந்ததும், அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த வட்டாட்சியர், சிட்டாஅடங்கல் வழங்குவதாக உறுதி அளித்ததால், நெல் மூட்டைகளை விவசாயி எடுத்துச் சென்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00